இன்று அதிகாலை 6 மணியளவில் பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது உறுதியானதைத் தொடர்ந்து நேற்று ஒரு பவுண்ட் சுமார் 217 ரூபாயாக காணப்பட்ட பவுண்ட் பெறுமதி இன்று காலை 8 மணியளவில் 197 ரூபாயாக குறைவடைந்துள்ளது.
பிரிட்டனில் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் குறித்த கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியான நிலையில் அதன் நாணயமான பவுண்ட் ஸ்டெர்லிங்கின் மதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் காணாத பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.
நாணய வர்த்தகர்கள் இந்த வாக்கெடுப்பு முடிவுகளை அதிர்ச்சியுடன் எதிர்கொண்டதை அடுத்து இந்த வீழ்ச்சி ஏற்பட்டது.
வாக்கெடுப்பு எண்ணிக்கை நடந்த முதல் ஒரு மணி நேரத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக பவுண்ட் ஸ்டெர்லிங் உயர்ந்தது ஆனால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக வேண்டும் என்ற தரப்பு வெல்லக்கூடும் என்று ஆரம்பகட்ட வாய்ப்புகள் தெரியத் தொடங்கியபோது மீண்டும் அது வீழ்ந்தது.
உலக பொருளதார நெருக்கடி 2008ம் ஆண்டில் ஏற்பட்டதிலிருந்து இத்தகைய அதிரடியான வீழ்ச்சியை தாங்கள் பார்த்ததில்லை என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
ஆசியப் பங்குகளும் விலைகளில் சரிவைச் சந்தித்தன.
ஒரு கட்டத்தில், ஜப்பானின் எதிர்கால வர்த்தக சந்தைகள் சுட்டெண் பெரும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து, அதன் மின்சார தொடர்பே துண்டிக்கப்பட்டு , சந்தை வர்த்தகம் இடை நிறுத்தப்படும் நிலைக்கு வந்தது.