யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவில் அனைத்துப்போட்டிகளிலும் அதிக புள்ளிகளைப்பெற்று தெல்லிப்பழை பிரதேச செயலகம் இவ்வருடத்திற்கான மாவட்ட சம்பியனாகியது.
யாழ் மாவட்ட செயலக விளையாட்டுப்பிரிவினர் நடத்திய விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வில் கடந்த செவ்வாய்கிழமை நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.அதில் பிரதேசசெயலகங்களுக்கிடையில் இடம்பெற்ற பெருவிளையாட்டுகள் மற்றும் தடகளப்போட்டிகள் ஆகியவற்றில் பங்குபற்றிய தெல்லிப்பழை பிரதேச செயலக அணி 105புள்ளிகளைப்பெற்று இவ்வருட மாவட்டச்சம்பியனுக்கான கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.நல்லூர் பிரதேச செயலகம் 95 புள்ளிகளைப்பெற்று இரண்டாமிடத்தையும் பருத்தித்துறை பிரதேச செயலகம் 91 புள்ளிகளைப்பெற் றுமூன்றாமிடத்தையும் யாழ்ப்பாணம் பிரைதேச செயலகம் 89.5 புள்ளிகளைப்பெற்று நான்காமிடத்தையும் உடுவில் பிரதேச செயலக அணி 68.5 புள்ளிகளைப் பெற்று ஜந்தாமிடத்தையும் கோப்பாய் பிரதேச செயலக அணி 57 புள்ளிகளைப்பெற்று ஆறாமிடத்தையும் சங்கானை பிரதேச செயலக அணி 34 புள்ளிகளைப் பெற்று ஏழாமிடத்தையும் கரவெட்டி பிரதேச செயலக அணி 24 புள்ளிகளை பெற்று எட்டாமிடத்தையும் சண்டிலிப்பாய்பிரதேச செயலக அணி 17 புள்ளிகளைப் பெற்று ஒன்பதாவது இடத்தையும் சாவகச்சேரி பிரதேச செயலக அணி 7புள்ளிகளைப்பெற்று பத்தாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.