மறைந்த சைனிங்ஸ் உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக வல்வை சைனிங்ஸ் விளையாட்டு கழகம் 2 வது வருடமாக நடாத்தும் உதைபந்தாட்டதொடரின் இறுதியாட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
நேற்றுபி.ப4.00 மணியளவில் வல்வை றெயின்போ விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது . வல்வை இளங்கதிர் வி.க அணியை எதிர்த்து வல்வை ரேவடி வி.க மோதியது ஆரம்பம் முதல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாக அமைய போட்டியின் 10 வது நிமிடத்தில் ரேவடி வி.க முன்கள வீரர் அபார கோல் போட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க போட்டி இன்னும் சூடு பிடித்தது இந்த நிலையில் முதல் பாதி ஆட்டம் நிறைவு பெற இரண்டாவது பாதியில் இளங்கதிர் முன்கள வீரர் பிரசாந் அபாரவிதமாக கோல் போட போட்டி சமநிலையில் முடிவுற்றது தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க தன்டை உதை வழங்கப்பட்டது தன்டை உதையில் இளங்கதிர் அணியினர் 4:3 என்ற நிலையில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாகவும் கிண்ணத்தை கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இளங்கதிர் அணியின் பிரசாந் தெரிவுசெய்யப்பட்டதோடு தொடர் நாயகனாக இளங்கதிர் அணியின் இளம் வீரர் கபிலன் தெரிவுசெய்யப்பட்டார்.