ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மீன்களை ஏற்றுமதி செய்வதற்கு சிறிலங்காவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நீக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு கடந்த ஆண்டு துவக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்திருந்தது. இதனால் சிறிலங்காவின் ஏற்றுமதி வருமானம் கணிசமாக வீழ்ச்சியடைந்தது.
சிறிலங்காவின் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த நாளில் இருந்து, மேற்கொண்டு பேச்சுக்களின் விளைவாக, சிறிலங்காவில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் நேற்று அறிவித்துள்ளது.