அபார வெற்றியுடன் அரையிறுதியில் இளங்கதிர் அணி.

0
582 views

சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் மறைந்த உறுப்பினர் நடராசா வைத்திலிங்கம் (வைத்தியப்பா) ஞாபகார்த்தமாக 2 வது வருடமாக நடாத்தும் சுழல் கிண்ண உதைபந்தாட்ட தொடர் நேற்று ஆரம்பமாகியது.போட்டிகளை வல்வை விளையாட்டுக்கழகத்தலைவரும் சைனிங்ஸ் விளையாட்டுக்கழக தலைவரும் ஆரம்பித்து வைத்தனர்.
முதலாவது காலிறுதிப் போட்டியிலே கடந்த வருடம் வைத்தியப்பா ஞாபகார்த்த சுழல் கிண்ணத்தை வென்ற நடப்புச் சம்பியன் இளங்கதிர் அணியுடன் சைனிங்ஸ் அணி மோதியது.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இளங்கதிர் அணி 5:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு நுழைந்தது.ஆட்டநாயகன் விருதினை இளங்கதிர் வீரன் பிரசாந் பெற்றார்.அவருக்கான பதக்கத்தினை சைனிங்ஸ் முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் வழங்கி கெளரவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here