மக்களின் நலனுக்காக துரிதப்படுத்தப்படும் பொலிஸ் சேவைகள்….

0
364 views

இரவு நேரங்களில் 9 மணிக்குப்பிற்பாடு தேவையற்ற விதமாக வீதிகள் மற்றும் சந்திகளில் ஒன்றுகூடுவோர் இரவு நேரங்களில் நடமாடுவோர் உடன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்று நெல்லியடிப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பியந்த தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக நெல்லியடிப் பொலிஸ்ப்பிரிவிற்குட்பட்ட கரணவாய் ,துன்னாலை மற்றும் கரவெட்டி போன்ற பகுதிகளில் இரவு வேளைகளில் ஆடு மாடு மற்றும் கோழிகள் திருடப்படுவதுடன் திருடப்படும் கால்நடைகள் இப்பகுதிகளினூடாக வேறு இடங்களுக்கு கடத்தப்படுகின்றன என அப்பகுதி மக்களால் பல முறைப்பாடுகள் தெய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இரவு வேளைகளில் ஒன்றுகூடும் இளைஞர்கள் குழுச்சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் கரணவாய்ப்பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்தார். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எமது பொலிஸ் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் இரவு 9 மணிமுதல் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். பிரதான வீதிகள். மட்டுமன்றி கிராமங்களிற்கும் அப்படியே மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸாரின் ரோந்து நடவடிக்கைகளின் போது 9 மணிக்குப் பிற்பாடு அநாவசியமான முறையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடுவோர் மற்றும் குழுக்களாக ஒன்றுகூடி நிற்போர் உடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்து மறுநாள் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மதுபோதையில் ஓட்டும் வாகன சாரதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை வல்வெட்டித்துறைப் பொலிஸாரும் விசேட வாகனத்தின் மூலம் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இரவு உடுப்பிட்டி இமையாணன் மற்றும் வல்வெட்டிப் பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here