உடுப்பிட்டித் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரத்தின் 14 ஆண்டு நினைவு தினம் நேற்று சிறப்பாக தமிழரசுக்கட்சியின் உடுப்பிட்டித் தொகுதிக்கிளையினரால் அனுட்டிக்கப்பட்டது.
உடுப்பிட்டித் தொகுதி உபதலைவர் க.இரத்தினம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நெல்லியடிப் பஸ்நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட அமரரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. திருவுவச்சிலைக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரக்கடசித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன்,எம்.ஏ.சுமந்திரன்,சி.ஸ்ரீதரன் ஆகியோருடன் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தமிழரசுக்கட்நியின் செயலாளர்நாயகமும் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் எஸ்.துரைராஜசிங்கம் உட்படபலரும் அணிவத்தனர்.
அதற்கு முன்பாக நிகழ்விடத்திற்கு வருகை தந்த வடக்கு மாகாண சபை எதிர்கட்சி உறுப்பினர் சி.அகிலதாஸ் நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
தொடர்ந்து அஞ்சலி நிகழ்வுகள் கரணவாய் மூத்தவிநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் அஞ்சலி உரைகள் இடம்பெற்றன. அஞ்சலி உரைகளை எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் எஸ்.துரைராஜசிங்கம் ஆகியோர் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான வே.சிவயோகன் எஸ்.சயந்தன் அ.பரஞ்சோதி ஆர்னல்ட,எஸ்.சயந்தன் க.தர்மலிங்கம் ச.சுகிர்தன் ஆகியோருடன் தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்டக்கிளைத்தலைவர் பெ.கனகசபாபதி உட்பட முன்னாள் பிரதேச சபைத் தவிசாளர்கள் உறுப்பினர்கள் தமிழரசுக்கட்சியின் அங்கத்தவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் மாகண சபை உறுப்பினர் வே சிவயோனின் செல்வா அறக்கட்டளை நிதியத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் 6 பேருக்கு வாழ்வாதார உதவிகள் எதிர்கட்சித்தலைவரால் வழங்கப்பட்டது.