எதிர்வரும் 10 வருடங்களுக்குள் கடல் மட்டம் ஒரு மீற்றர் வரை உயரக்கூடும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் கலாநிதி செனவி ஏபிடவத்த தெரிவித்துள்ளார்.
தனது கருத்துக்கு எதிராக சில கலாநிதிகளும், பேராசிரியர்களும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கடலில் மாற்றங்கள் ஏற்படுவதனை தற்போதே காணக்கூடியதாக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று கடந்த காலங்களில் ஏற்பட்ட சூழல் மாற்றங்களால் உஷ்னத்தன்மை, மழை வீழ்ச்சி மற்றும் காற்றின் வேகம் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையை காணக்கூடியதாக உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.யாழ். குடா நாட்டிலுள்ள களப்புக்கள் மற்றும் கடலிலும் இதனை மிக தெளிவாக அவதானிக்க முடியும் என கலாநிதி செனவி ஏபிடவத்த குறிப்பிட்டுள்ளார்.
அதனால் எதிர்வரும் காலங்களில் யாழ். குடா நாட்டின் வரைபடத்தில் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக காணப்படுவதாகவும் அவர் உறுதியாக கூறியுள்ளார்.
அதேபோன்று யாழ்ப்பாணம் ஒரு தீவாக மாற்றமடையக்கூடிய சந்தர்ப்பமும் காணப்படுவதாக கலாநிதி குறிப்பிட்டுள்ளார்.