31 ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி வீட்டுக் கிருத்திய அழைப்பும்.
மலர்வு 26.07.1949 உதிர்வு 29.11.2014
அமரர் திரு நாகமுத்து பாலேந்திரன்.
கடந்த 29.11.2014 சனிக்கிழமை அன்று சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவர் அமரர் திரு. நாகமுத்து பாலேந்திரன் அவர்களின் அந்தியேட்டி நிகழ்வு 29.12.2014 திங்கட்கிழமை அதிகாலை கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும். அத்தருணம் தாங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
எமது குடும்பத் தலைவரின் மரணச் செய்தி கேட்டு உடன் வந்து உதவியவர்களுக்கும், மற்றும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியவர்களுக்கும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும் மற்றும் நேரில் வந்து அனுதாபங்களைத் தெரிவித்து ஆறுதல் கூறி;ய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
குடும்பத்தினர்.
ஆலடி ஒழுங்கை,
வல்வெட்டித்துறை.