இந்த வருடம் அம்மன் கோவில் திருவிழாவின் போது கோயிலிற்கு வந்த இளம்பெண்களுடன் சிலர் சேட்டை செய்ததை அறிந்து அங்கிருந்த வல்வை இளைஞர்கள் அவர்களுக்கு அடிக்கச் சென்ற போது அங்கிருந்த மற்றைய ஊர் மக்கள் அம்மன் கோவில் திருவிழா நேரத்தில் யாரையும் அடிக்க வேண்டாம் என்று இளைஞர்களை மறித்து இரண்டு ஆட்டோவிலிருந்த நபர்கள் அனைவரையும் எச்சரிக்கை செய்து அனுப்பியிருந்தனர். மேற்படி நபர்கள் இன்று…….
https://www.youtube.com/watch?v=_KflRt2Csz8
பாடசாலை மாணவன் ஒருவனுக்கு மதுபானம் அருந்தக்கொடுத்து துஸ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தனியார் கல்வி நிலைய நிர்வாகி உட்பட ஜவரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வல்வெட்டிப் பகுதியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழு ஒன்று அப்பகுதியிலுள்ள பாடசாலையில் கல்விகற்கும் 16 வயது மாணவனை தொண்டைமானாறு உல்லாசக் கடற்கரைக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி சாராயம் குடிக்கக்கொடுத்ததுடன் மாணவனின் மர்ம உறுப்புப் பகுதிகில் பிடித்து இழுத்து பாலியல் துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு ஈடுபட்டவர்களால் வெளியிடப்பட்ட படங்கள் மூலம் பெற்றோருக்குத் தெரிய வர மாணவனின் பெற்றோர்களால் வல்வெட்டித்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அப்குதியைச் சேர்ந்த 5 பேரை நேற்றுக் கைது செய்தனர்.அவர்களை நேற்று பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் நீதிவான் பெ.சிவகுமார் முன்னிலையில் முற்படுத்திய போது சந்தேக நபர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலிலல் வைக்குமாறு உத்தரவிட்டார்.