மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார்த்தை முன்னிட்டு பருத்தித்துறை முனைக் கடற்கரையில்
நேற்று சுடரேற்றி அஞ்சலி செய்யப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொது ஈகைச்சுடரினை வடமாகாண சபை உறுப்பினர் க. தர்மலிங்கம் ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஏனைய சுடர்களை வடமாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் கரவெட்டிப்பிரதேச சபை முன்னாள் உறுப்பினர். பொ. குகதாஸ் பருத்தித்துறை நகரசபை முன்னாள். உறுப்பினர்களான திருமதி மதினி நெல்சன் எஸ். தீபானந்தன
மற்றும் தமிழரசுக்கட்சியின் பருத்தித்துறைந்தொகுதி அமைப்பாளர் ஜி. தங்கவேல் உட்படப்பலரும் ஏற்றிவைத்தனர்.