மரண அறிவித்தல்
11.05.1928—— 05.05.2016
கனகசுந்தரம் நடேசன் (சட்டத்தரணி)
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஒய்வு பெற்ற தபாலதிபரும், சட்டத்தரணியுமான கனகசுந்தரம் நடேசன் அவர்கள் 05 – 05 – 2016 (வியாழக்கிழமை) அன்று காலமானார்.
கனகசுந்தரம் சிவகாமிப்பிள்ளை அவர்களின் அன்பு புதல்வனும், ஞானம்பிகையின் அன்புக்கணவரும், ரவிசங்கர்(Swiss), கௌரி(UK), கீதாஞ்சலி(UK), யமுனா ஜெயந்தி(Canada), ராதாகிருஷ்ணன்(Australia), ரஞ்சித் ஜெகமோகன் ஆகியோரின் அன்புத் தந்தையாருமாவார்
சுகன்யா, பாலேந்திரன், சிவகுமார், மக்ஸ்வெல், மேனுகா, அபிராமி ஆகியோரின் மாமனாரும், அஸ்வினி சுகிர்தா, பிருந்தா, பிரியா, சுருதி, ஜஸ்வர்யா, வர்சா, ரூபன், அஸ்தினா, ரோஜன், ரோஜனா, யாதவன், இனியவன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னார் காலஞ்சென்ற தில்லைநாயகி, காலஞ்சென்ற செல்வநாயகி, சிவகாமசுந்தரி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, முருகமூர்த்தி, மயிலேறும் பெருமாள் (ஒய்வு பெற்ற வைத்தியர்), தவமணிதேவி ஆகியோரின் சகோதரருமாவார்.
காலஞ்சென்ற சிவஞானசுந்தரம், காலஞ்சென்ற குமாரசுந்தரம், கார்மேகசுந்தரம், நிர்த்தனசுந்தரம், கணேச சுந்தரம், பாஸ்கர சுந்தரம், விஜியாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமக் கிரியைகள் 08/05/2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
021 226 5008
.