தொண்டைமானாறு சந்நிதி கோயில் ஆற்றிலுருந்து சுமார் 46 வயது மதிக்கத்தக்க ஆணொருவரின் சடலம் நேற்று வல்வெட்டித்துறைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்நிதி கோவிலுக்கு பின்பகுதியிலுள்ள ஆற்றில் குளித்தவரகள் சடலம் மிதம்பதைக்கண்டு வல்வெட்டுத்துறைப்பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். காலை 10 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்ட குறித்த சடலம் பிற்பகலில் நீரில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது.
சடலம் இனம்காணும் பொருட்டு வல்வெட்டித்துறை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.