மாநில அளவிலான குறுந்தொடர் நீச்சல் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றார் ஈழச்சிறுமி தனுஜா!

0
268 views

மதுரையில் நடைபெற்ற 10 வது தமிழ்நாடு மாநில குறுந்தொடர் நீச்சல் போட்டித்தொடர் – 2015 (10 th Tamilnadu State Short Course Swimming Championship – 2015) இல் கலந்துகொண்ட ஈழச்சிறுமி தனுஜா ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் கடந்த 23,24 ஆம் திகதிகளில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தனுஜா ஜெயக்குமார் பத்து வயது பிரிவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டார்.

25 மீட்டர் Butterfly பிரிவு நீச்சல் போட்டியில் குறித்த தூரத்தை 17:32 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தையும், 25 மீட்டர் Back Stroke பிரிவு நீச்சல் போட்டியில் குறித்த தூரத்தை 19:57 வினாடிகளில் கடந்து இரண்டாவதிடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும், 50 மீட்டர் Free Style பிரிவு நீச்சல் போட்டியில் குறித்த தூரத்தை 34:62 வினாடிகளில் கடந்து வெண்கலப்பதக்கத்தையும் தனதாக்கியுள்ளார்.

இதேவேளை 25 மீட்டர் Free Style பிரிவு நீச்சல் போட்டியில் குறித்த தூரத்தை 15:12 வினாடிகளில் கடந்து இரண்டாவதாக வந்த போதிலும் ஆரம்ப ஒலி எழுப்புவதற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டார் என்ற காரணத்தை குறிப்பிட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டமையால் இன்னொரு பதக்க வாய்ப்பு இல்லது போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here