பல தடைகளை கடந்தும் தொடரும் நம்மவரின் சர்வதேச அறிமுகங்கள்…!

0
474 views

பல தடைகளை கடந்தும் தொடரும் நம்மவரின் சர்வதேச அறிமுகங்கள்…!

கொரியா செல்லவுள்ள இலங்கை 19 வயதுக்குற்ட்டவர்களுக்கான அணியில் நம்மவர்கள் ஐவர் தெரிவு…!

Asian school football championship போட்டிக்காக அடுத்த மாதம் கொரியா செல்லவுள்ள இலங்கை (u-19) உதைபந்தாட்ட அணியில் வடக்கின் உதைபந்தாட்ட வல்லவர்களாக திகழும் ஹென்றியரசர் கல்லூரியின் வீரர்களான நே.அன்ரனி றமேஷ், செ.யூட் சுபன், மற்றும் அ.மதுசன், மற்றும் யாழ் மத்திய கல்லூரியின் வீரர்களான விதுசன் மற்றும் சயந்தன் ஆகிய ஐந்து வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் சுபன் மற்றும் மதுசன் ஆகியோர் ஏற்கனவே தமது சர்வதேச அறிமுகத்தினை கடந்த ஆண்டு இடம்பெற்ற இலங்கை அணியின், சீனப் பயணத்தின் போது மெற்கொண்டு, பின்னர் AFC, U-19 (asian football confederation) தகுதிகாண் போட்டிகளிலும் (bangladesh) பங்குபற்றியிருந்தனர்.

மேலும் சுபன், அடுத்த பருவகாலத்திற்கான இலங்கை தேசிய சீனியர் அணியின் பயிற்சிகளில் பங்குபற்றுவதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இவரின் சகோதரனான ஞானரூபன் அவர்களும் தற்போது சர்வதேச மட்டத்தில் இலங்கை அணியினை பிரதிநிதித்துவப்படுத்தி சாதிக்கின்றமை விஷேடமாகும்.

இவ்வருடம் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய ரீதியில் நடைபெற்ற பல போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து நே.அன்ரனி றமேஷ், விதுசன் மற்றும் சயந்தன் ஆகியோருக்கு தற்போது தமது சர்வதேச அறிமுகத்தினை மேற்கொள்வதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.

இவ்வருடம் தேசியரீதியில் இடம் பெற்ற Kotmale Chox U19 Schools Football சற்றுப்போட்டியில் ஹென்றியரசர் சம்பியன்களானமையும், அந்த அணியில் இவர்கள் மூவரும் இடம்பிடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் ஆரோக்கியமான விடயம் என்னவெனில் 20 பேர் கொண்ட அணியில் தலைநகரின் முக்கிய பல பாடசலைகளைத் தாண்டி அதிகளவு வீரர்கள் எமது வடக்கை பிரதிநுவப்படுத்துகின்றமை பெருமையடையக்கூடிய விடயமாகும்.

இவர்களின் கொரிய பயணம் வெற்றிகரமானதாக அமையவும், சர்வதேச மட்டத்தில் மேலும் பல சாதனைகள் படைத்து தமது கல்லூரிகளுக்கும், எமது மண்ணுக்கும் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

மேலும் இவர்களை போல் இன்னும் பல திறமையானவர்கள் நம் மண்ணில் கண்களில் சர்வதேசக் கனவுடன் தமது திறமைக்கான அங்கீகாரத்திற்காக ஏக்கத்துடன் காணப்படுகிறார்கள். நம்மவர்களின் சர்வதேச அறிமுகங்கள் ஒர் சாதனை தான் எனினும், சாதனை என்பதற்கு அப்பாற்பட்டு இவர்களை போல் இன்னும் சர்வதேச அறிமுக கனவுகளுடன் போராடிக்கொண்டிருக்கும் நம்மவர்களின் பார்வையில் விடிவெள்ளியாகவே காணப்படுகிறார்கள்.

எவ்வாராயினும் வரும் காலத்தில் இன்னும் பல நம்மவர்களின் கனவுகள் நனவாகும் எனும் நம்பிக்கையோடு வடக்கை பிரதிநிதிதுவப்படுத்தும் நம்மவர்களை மேலும் பல சிகரங்களை தொட்டு எமது மண்ணுக்கு பெருமை சேர்க நாமும் வாழ்த்துவோமாக….!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here