இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக பொருட்களைக் கடத்திய குற்றச்சாட்டில் 6 பேரை இன்பருட்டியில் வைத்து வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேற்றுக் கைது செய்தனர்.
இயந்திரம் படகு ஒன்றில் சென்ற 6 பேர் இந்தியாவில் இருந்து பாவித்த மோட்டார் செக்கிள் மற்றும்20 கிலோ புளி போன்ற் பொருட்களைக் கொண்டு வந்து இறக்கும் போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ந.கோணேஸ்(வயது-45)இகோ.புஸ்பராசா(வயது-19)இகோ.ரூபதாஸ்(வயது17)
சி. வைரமுத்து(வயது(வயது40) ப. நவரத்தினம் ((வயது 40) ஜெ.ஜேசுராசா (வயது 36) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவார்கள.இவர்களுக்கெதிராக பருத்தித்துறை நீதிமன்றில். வழக்குத்தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை அண்மைக்காலமாக கஞ்சா கடத்தும் முக்கிய இடமாக இப்பகுதி விளங்குவதாகவும் கைது செய்யப்பட்டவர்களுக்கும் கஞ்சா கடத்தலுக்கும் தொடர்பிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.