யாழ் மாவட்டத்தலேயே முதல் முறையாக வல்வையில் கடற்கரை உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
இன்று (23.04.16) யாழ் மாவட்டத்தலேயே முதல் முறையாக வல்வையில் கடற்கரை உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஆரம்பமாகியுள்ளது . இது பரஞ்சோதி அப்பா மற்றும் சந்திரமோகன் அவர்களின் ஞாபகார்த்தமாக வல்வை விளையாட்டுக்கழகத்தினhல் வல்வை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் நடாத்தப்படுகின்றது இச் சுற்றுப்போட்டியில் வல்வையை சேர்ந்த 7 கழகங்களில் இருந்து 12 அணிகள் பங்குபற்றுகின்றன. போட்டிகள் 23,24,26,27 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
பிறேசில் நாட்டிலேயே அதிகமான கடற்கரை உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் நடைபெறுவது வழமை. கடற்கரை நகரான வல்வையிலும் அதே போல் ஒரு உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை நடாத்துவதற்கு வல்வை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் உதயசூரியன் கழகத்தால் கடற்கரை உதைபந்தாட்ட மைதானம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானத்திற்குரிய கோல் போஸ்ட் இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருக்கும் செல்வன் நிர்மலன் அருணாசலம் அவர்களால் உதயசூரியன் கழகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.