பச்சை வாழைப்பழத்தை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

0
283 views

பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடையது.குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது.பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிக அளவில் உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமெனில் இதனை சாப்பிடலாம்.மேலும், இதய நோயாளிகளுக்கும் சிறந்தது, அதுமட்டுமின்றி சூடாக்கிய 1 கப் பச்சை வாழைப்பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் இதனை எடுத்துக்கொள்ளலாம்.மஞ்சை வாழைப்பழத்துடன் ஒப்பிடுகையில் பச்சை வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளது. ஒரு கப் பச்சை வாழைப்பழத்தில் 531 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.
எனவே இதயநோயாளிகள் இதனை சாப்பிட வேண்டும், ஆனால் அதிக அளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்கு பயனிளிக்காது என்பதால் அதனை கருத்தில் கொள்ள வேண்டும்மேலும், இதில் விட்டமின் டீ6 நிறைந்துள்ளதால் உடலில் ஆக்ஸிஜனேற்றம் சிறப்பாக செயல்புரிய உதவுகிறது, மேலும் அது ஹீமோகுளோபின் உருவாவதற்கு விட்டமின் டீ6 அவசியமான ஒன்றாகும்.மேலும், விட்டமின் டீ6 இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.மேலும், சீரான பற்களின் வளர்ச்சிக்கு பச்சை வாழைப்பழம் சாப்பிட வேண்டிய ஒன்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here