வல்வை விளையாட்டுக்கழகம் நவசக்தி விளையாட்டுக் கழகம் அடுத்தசுற்றுக்கு முன்னேறியுள்ளன.

0
411 views

திக்கம் கால்ப்பந்தீட்டத்தொடரில் வல்வை விளையாட்டுக்கழகம் மற்றும் நவசக்தி விளையாட்டுக் கழகம் என்பன வெற்றி பெற்று அடுத்தசுற்றுக்கு முன்னேறியுள்ளன.
திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகம் யாழ் தாவட்ட ரீதியாக நடத்தும் அணிக்கு 9 பேர் பங்குபற்றும் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி குறி்த்த மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.முதலில் இடம்பெற்ற ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக்கழகமும் இமையாணன் இளைஞர் விளையாட்டுக்கழகமும் மோதின. ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலத்திய வல்வை அணி 7:1 என்ற கோல்கணக்கில் வல்வை அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்களுக்கு முன்னேறியது.
தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மயிலங்காடு ஞானகலா விளையாட்டுக்கழகமும் கரவெட்டி நவசக்தி விளையாட்டுக் கழகமும் மோதின. ஆரம்பம் முதல் இறுதிவரை பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்ற ஆட்டத்தில் 2:1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று அடுத்தசுற்றுப் போட்டிகளுக்கு முன்னேறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here