வடமராட்சி, மணற்காட்டு சவுக்குக் காட்டில் இன்று செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திரத் தீர்த்தம் இடம்பெறும் பகுதியிலுள்ள சவுக்குக் காட்டிலே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் நெல்லியடி வல்வெட்டித்துறை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் தீயினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.இந்த அனர்த்தால் சுமார் 10 ஏக்கருக்கு மேற்பட்ட பகுதியிலுள்ள சவுக்கம் மரங்கள் தீயில் எரிந்து நாசமாயின்பெருமளவான மணற் பாங்கான பிரதேசமாக இருப்பதால் தீயணைப்பு வாகனத்தையோ பிற வாகனத்தையோ கொண்டு சென்று தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது