பருத்தித்துறை வாரியேர்ஸ் மற்றும் புலோலியூர் இளந்தளிர் விளையாட்டுக் கழகம் இணைந்து நடாத்தும் யாழ் மாவட்ட ரீதியிலான துடுப்பாட்ட சுற்றுப்போட்டியில் நேற்றய முதல் நாள் போட்டியில் வல்வை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
தமது முதல் போட்டியில் 33 ஓட்டங்களால் மாதனை விக வையும், காலுறுதிப் போட்டியில் ஒரு இலக்கினால் வீனஸ் விக வையும், அரையிறுதிப் போட்டியில் 8 ஓட்டங்களால் வதிரி ஸ்ரீமுருகன் விக வையும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இறுதிப்போட்டியில் இன்றய நாள் நடைபெறும் போட்டிகளில் தெரிவுசெய்யப்படும் அணியுடன் நாளை மாலை 04.00 மணியளவில் பருத்தித்துறை வீனஸ் விக மைதானத்தில் நடைபெறவுள்ளது.