வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் அனுசரணையுடன், வடமராட்சி வடக்கு,பிரதேச செயலகத்தினால் கடந்த 5ஆம் திகதி வெள்ளிக்கிழமையும்,7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான, சிறுகதைப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் கவிஞர் இ.த.ஜெயசீலன் தலைமையில் ஆரம்பமான மேற்படி செயலமர்வின் வரவேற்புரையை கலாசார உத்தியோகத்தர் சைவப் புலவர் பொன்.சுகந்தன் நிகழ்த்தினார். வடமராட்சி வடக்கு பிரதேச எல்லைக்குள் அமைந்துள்ள காட்லிக் கல்லூரி,வடஇந்து மகளிர் கல்லூரி,வல்வை மகளிர் கல்லூரி,புலோலி மெதடிஸ்ற் மிசன் பாடசாலை,வல்வை சிவகுரு வித்தியாலயம், பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலைகளைச் சேர்ந்த 60 மாணவர்கள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்களும் இச்செயலமர்வில் பங்கு பற்றியிருந்தனர்.
வடமராட்சி வடக்கு கலாசார உத்தியோகத்தர் செல்வி சி.செல்வசுகுணாவின் மேற் பார்வையில் இரு நாட்களும் நடைபெற்ற இச்செயலமர்வில் வடமராட்சியின் பிரபல எழுத்தாளர்களான தெணியான்,கலாநிதி.த.கலாமணி,வல்வை.ந.அனந்தராஜ்,விரிவுரை யாளர் இராஜேஸ்கண்ணா,குப்பிழான்.ஐ.சண்முகம்,அஜந்தகுமார், குணேஸ்வரன், சமரபாகு சி.உதயகுமார் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
மேற்படி சிறுகதைப்பட்டறையின் முடிவில் மாணவர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளில் தரமான சிறுகதைகள் தெரிவு செய்யப்பட்டு,அவை தொகுப்பு நூலாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கலாசார உத்தியோகத்தர் தெரிவித்தார்.
சிறுகதைப் பயிற்சிச்செயலமர்வில் கலந்து கொண்ட வளவாளர்களும், பாடசாலைகளின் ஆசிரியர்களும்