வல்வை பட்டத்திருவிழாவை முன்னிட்டு வல்வையில் சிறப்பு உணவகம் லண்டன் மற்றும் வல்வை உதயசூரியன் அங்கத்தவர்களால் நடாத்தப்பட்டது. இந்த லண்டன் உணவகம் பட்டத்திருவிழாவை பார்க்க வந்திருந்த மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.உணவகம் ஆரம்பித்த நேரத்திலிருந்து முடியும் வரை உணவுகள் சூடாகவே வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. உணவுகளை போட்டுக் கொடுக்கும் பெட்டிகள் (Containers), கரண்டிகள் Tissue போன்ற பொருட்கள் எல்லாம் லண்டனிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தது.
உணவகத்தின் முக்கிய பொறுப்பாளர் சிவகணேஸ் அவர்களிடம் உணவகத்தின் செயற்பாடுகள் பற்றிக் கேட்ட போது….
வருமானத்தை நோக்காகக் கொண்டு இந்த லண்டன உணவகத்தை நடாத்தவில்லை. பொங்கல் திருநாளில் எங்கள் தெருவை நாடி வரும் மக்களுடைய மகிழ்ச்சியும் , திருப்தியுமே முக்கிய நோக்காகக் கொண்டு செயற்பட்டோம்.உணவருந்தி பின்பு மக்கள் கூறிய கருத்துக்கள் எமது உணவகத்தின் வெற்றியாகும் என்று கூறியதுடன்
சிவகணேஸ் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் தாம் சிறு குறையாக நினைப்பது தம்மால் லண்டனிலிருந்து அனுப்பப்பட்ட வெள்ளை சீருடைகள் மற்றும் வெள்ளை தொப்பிகள் அடங்கிய பார்சல் விழாவிற்கு அடுத்த நாளே ஊருக்கு வந்து சேர்ந்தது என்றும் அதனால் உணவக பணியாளர்கள் சீருடைகளை அணிந்து பணியாற்ற முடியாமைக்காக வருத்தம் தெரிவித்தார். அத்துடன் உணவகத்தில் பணியாற்றிய அனைவருககும் நன்றி தெரிவித்தார்.