உதயசூரியன் உல்லாச கடற்கரை அணை வேலைத்திட்டத்திற்கு நிதி உதவி புரிந்த அனைத்து உதயசூரியன் கழக நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், இது வரை நிதி உதவி புரிந்த அனைத்து அங்கத்தவர்களுடைய பெயர்களும் அணையில் கல்வெட்டில் பதிக்கப்பட்டுள்ளது. விபரங்களை தொடரும் படங்களில் காணலாம்.
6 உதயசூரியன் கழக அங்கத்தவர்கள் தலா 5 இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட தொகையினை அன்பளிப்பாக வழங்கியிருந்தனர்
நிதி உதவி புரிந்த புலம் பெயர் நாடுகளில் வாழும் அங்கத்தவர்கள் (95 வீதத்திற்கு மேற்பட்டோர்) 50 ஆயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட தொகையினை அன்பளிப்பாக வழங்கியிருந்தனர்
வல்வையில் வாழும் கழக அங்கத்தவர்கள் தம்மால் முடிந்த அளவு அதிக பட்ச நிதிப்பங்களிப்பை செய்திருந்தனர். பங்களிப்பு செய்த அனைவருக்கும் மறுபடியும் எமது நன்றிகள்
ஓர் அன்பான வேண்டுகோள் !!!
அணை சம்பந்தமாக இன்னும் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். அணையின் வெளிப்பக்கம் (கடல் பக்கம்) கற்கள் போடுதல், இரண்டு அடி ஆழத்திற்கு மண் அரித்து கடற்கரையை சுத்தம் செய்தல், முதியோர் அமர்வதற்கு இருக்கைகள் பதித்தல் போன்றன. அணைத்து வேலைத்திட்டங்களையும் பூரணப்படுத்துவதற்கு நிதி தேவைப்படுகின்றது எனவே
இது வரை நிதி உதவி புரியாத உலகம் முழுவதும் பரந்து வாழும் உதயசூரியன் கழக அங்கத்தவர்கள் எங்களுடன் தொடர்பு கொண்டு முடிந்த நிதி உதவியை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
50 ஆயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட தொகையினை வருகின்ற 29.02.2016 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குபவர்கள் பெயர்களும் கல்வெட்டில் பதிக்கப்படும்
தொடர்புகளுக்கு 0044 7463931361 , 0044 7429058469, 0094 777627885