பனால்டி உதைமூலம் 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு காலிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது வல்வை நெடியகாடு விளையாட்டுக்கழகம்.

0
264 views

திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகத்தை பனால்டி உதைமூலம் 4:3 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு காலிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது வல்வை நெடியகாடு விளையாட்டுக்கழகம்.
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கில் அங்கத்துவம் பெற்றுள்ள அணகளின் 19 வயதுப் பிரிவினருக்கான ஆட்டம் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.
இதில் நேற்று இடம்பெற்ற ஆட்டம் ஒன்றில் வல்வை நெடியகாடு விளையாட்டுக்கழகமும் திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகமும் மோதின.ஆட்டநேர முடிவில் இரு அணியினரும் கோல் கணக்கை ஆரம்பிக்காது சமனிலையில் முடிவடைந்தது.
இதனையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக வழங்கப்பட்ட சமனிலை தவிர்ப்பு உதையில் நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் 4:3என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here