வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டப்போட்டிகள்

0
208 views

கரணவாய் ஜன 11 வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்டப்போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல்
மாதம் 9ஆம் திகதி முதல் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளன.
இதில் முதலாம் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் போட்டிகள் யாழ் மாவட்டத்திலும் இரண்டாம் கட்டப் போட்டிகள் மன்னார் மாவட்டத்திலும் மூன்றாம் கட்டப்போட்டிகள் வ்வுனியா மாவட்டத்திலும் இடம்பெறவுள்ளன.
19 வயதுக்குட்பட்ட ஆண் பெண்களுக்கான அரைமரதன் ஓட்டம் ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும். மன்னார் மாவட்டத்தில் இடம்பெறும் இரண்டாம் கட்டப்போட்டியில் 15,19 வயது ஆண்பெண்களுக்கான பூப்பந்தாட்டப்போட்டிகள் மே மாதம் 10 ஆம் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் மன்னார் உள்ளரங்கிலும் அதே தினத்தில் எல்லே சுற்றுப்போட்டி முருங்கன் மத்திய மகா வித்தியாலயத்திலும. 13ஆம் 14ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் ஆண்பெண்களுக்கான மேசைப்பந்தாட்டம் மன்னார் உள்ளக விளையாட்ரங்கிலும் இடம்பேறவுள்ளன. வ்வுனியாவில் இடம்பெறும் மூன்றாம்கட்டப்போட்டியில் மே 19,20,21,22ஆம் திகதிகளில் ஆண்பெண்களுக்கான கபடிப்போட்டிகள்ஓமந்தை மத்திய கல்லூரியிலும் 22,23,24ஆம் திகதிகளில் ஆண் பெண்களுக்கான எறிபந்தாட்டம் அதே மைதானத்திலும்25,26இ,27 ஆம் திகதிகளில்
ஆண்களுக்கான கிறிக்கற் போட்டி வ்வுனியா நகரசபை மைதானத்திலும் பெண்களுக்கான போட்டிஓமந்தை மத்திய கல்லூரி மைநானத்திலும் இடம்பெறவுள்ளன.
யாழ் மாவட்டத்தில் இடம் பெறும் ஏனைய போட்டிகளில் 15,17இ,19 வயது ஆண் பெண்களுக்கான கரேத்தே யாழ் இந்துக்கல்லூழியில் மே 31மற்றும் ஜூன் 1ஆம் திகதிகளிலும் 1,2ஆம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரியில் கூடைப்பந்தாட்டமும்2,3 ,4,5 ஆம் திகதிகளில் 15,19 ஆண் பெண்களுக்கான பளூதூக்கல் மற்றும் சதுரங்கப் போட்டிகளும் 6,7,8,9 ஆம் திகதிகளில் ஆண்பெண்களுக்கான கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டி நெல்லியடி மத்திய கல்லூரியிலும் 9,10 ஆம் திகதிகளில் 19 ஆண் பெண்களுக்கான ஹெக்கி சென் ஜோன்ஸ் கல்லூரியிலும் 11,12ஆம் திகதிகளுல் 15 ,19 வயது பெண்களுக்கான சதுரங்கமும்13,14திகதிகளில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ரெனீஸ் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும் ஜூன்13,14,15ஆம் திகதிகளில் 15,19 வயது ஆண் பெண்களுக்கான கரம் சுற்றுப் போட்டி யாழ் மத்திய கல்லூரியிலும் 15ஆம் திகதி 19 வயது ஆண்பெண்களுக்கான உடலப்பயிற்சியும் 16ஆம் திகதி உடற்பயிற்சி யாழ் துரையப்கா விளையாட்டலங்கிலும் 17,18,19,20ஆம் திகதிகளில் 15 ,17,19 ஆண்களுக்கான உதைபந்தாட்டமும் 19 வயதுப் பெண்களுக்கான உதைபந்தாட்டமும் 20,21,22 ஆம் திகதிகளில் 15,17,19 வயதுப்பெண்களுக்கான வலைப்பந்தாட்டம் யாழ் துரையப்பா விளையாட்டரங்கிலும் இடம்பெறவுள்ளன.இறுதிக்கட்டமான தடகளப் போட்டிகள் ஜூலை 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிகளில் யாழ் திரையப்பா விளையாட்டரங்கிலும் இடம்பெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here