இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 2 டெஸ்ட் கொண்ட தொடரை 2–0 என்ற கணக்கிலும்இ 5 ஒருநாள் தொடரை 3–1 என்ற கணக்கிலும் நியூசிலாந்து கைப்பற்றியது. இரண்டு 20 ஓவர் போட்டித்தொடரில் முதல் ஆட்டம் இன்று நடந்தது.இலங்கை கேப்டன் சன்டிமால் ‘டாஸ்’ வென்று நியூசிலாந்தை முதலில் விளையாட அழைத்தார். அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் குவித்தது. அதிரடியாக துடுபெடுத்தாடிய தொடக்க வீரர் குப்தில் 34 பந்தில் 58 ரன்னும் (4 பவுண்டரிஇ 4 சிக்சர்)இ நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 42 பந்தில் 53 ரன்னும் (5 பவுண்டரிஇ 1 சிக்சர்) எடுத்தனர். குலசேகரா 2 விக்கெட் கைப்பற்றினார்.
183 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இலங்கை களம் இறங்கியது. அந்த அணி இலக்கை நோக்கி முன்னேறிய போது விக்கெட்டுகளும் சரிந்தன. ஆட்டத்தின் கடைசி ஓவரில் இலங்கை அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைபட்டது. கைவசம் 3 விக்கெட் இருந்து.எலியட் வீசிய அந்த ஓவரில் இலங்கை அணியால் 9 ரண்னே எடுக்க முடிந்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது. தொடக்க வீரர் தனுஷ்கா குணதிலங்கா 46 ரன்னும்இ ஸ்ரீவர்த்தனா 42 ரன்னும் எடுத்தனர். போல்ட்இ ஹென்றி தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள். ஆட்டநாயகனாக 21 ஓட்டங்களுக்கு 03 விக்கெட் வீழ்த்திய போல்ட் தெரிவானார்
2–வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் வருகிற 10–ந் தேதி நடக்கிறது.
Home வல்வை விளையாட்டு செய்திகள் ரீ20 இல் பலத்த போராட்டத்துக்கு மத்தியில் இலங்கையை வீழ்த்தியது நியூசிலாந்து….