பருத்தித்தறை உதைபந்தாட்ட லீக் அங்கத்துவக் கழகங்களிற்கிடையில் நடத்தும் எவ்.ஏ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி அல்வாய் நண்பர்கள் விளையாட்டக் கழகத்தில் இடம்பெற்று வருகின்றது அதில் இன்று காலை இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் வல்வை விளையாட்டுக் கழகமும் தொண்டைமானாறு ஒற்றுமை விளையாட்டுக் கழகமும் மோதின. இதில் 6:0 என்ற அடிப்படையில் வல்வை விளையாட்டு;க கழகம் வெற்றி பெற்றது.
அவ்வணி சார்பாக பிரணவன் கட்றிக் கோல்களையும் பிரசாத் 2 கோல்களையும் ஜெயக்குமார் மற்றும் உதயசிலன் இருவரும் தலா ஒரு கோலைப் போட்டனர்