அதில் நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதியாடடத்தில் திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழகமும் சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக்கழகமும் பலப்பரீட்சை நடத்தின.
மிகவும் பரபரப்பாக ஆரம்பமான இவ்வாட்டத்தில் கோல் போடுவதற்கு இரு அணியினரும் பகீரதப்பரயத்தனம் செய்தனர். பந்து அங்குமிங்கும் உருண்டோட நேரமும் சுழன்று ஓட முதற்பாதி கோல்கள் பெறப்படாது நிறைவடைந்தது.
இடைவேளையின் பின் முதல் பதின்ம நிமிடங்கள் வரை இதே நிலை நீடித்த போதும் 14 ஆவது நிமிடத்தில் சக்கோட்டை அணியின் குமாரதீபன் கோல்போட அதுவே அவ்வணியின் வெற்றிக் கோலாக அமையும் என எவரும் எதிர்பார்க்கவில்லை. இறுதியில் முடிவு அவ்வாறே அமைய 1:0 எனவென்று இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றது சென்சேவியர் விளையாட்டுக் கழகம்.
தொடர்ந்து இடம் பெற்ற மற்றொரு அரையிறுதியாட்டத்தில் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகமும் மணற்காடு செ அன்ரனீஸ் விளையாட்டுக் கழகமும் மோதின. ஆட்டத்தை; ஆரம்பம் முதல் இறுதிவரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விண்மின் அணி டேமியனின் கற்றிக் கொலுடன் 6:0 என்று வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது. அவ்வணி சார்பாக டேமியன் 4 கோல்களையும் ஜோன் கெனடி மற்றும் அருள்தாஸ் ஆகியோர் தலாஒருகோலையும் போட்டனர்.