அண்மைக்காலமாக யாழ்மாவட்டத்தில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை, மற்றும் சட்டவிரோத செயல்கள் என்பன அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் நோக்கிலும், இவ்வாறான செயற்பாடுகளை முற்றாக ஒழிப்பதற்கு உதவி வழங்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவை தொடர்பான தகவல்களை 076-6633750 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவpக்கமாறு தெரிவித்துள்ளனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழில் தலைதூக்கிய போதைப்பொருள் கலாச்சாரம், ரவுடிகளின் அச்சுறுத்தல்கள், பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் வன்கொடுமைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
இதனையடுத்தே பொலிஸார் இது தொடர்பான அறிவித்தல் அடங்கிய சுவரொட்டிகளை பல இடங்களில் ஒட்டியுள்ளனர்