பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கினால் அங்கத்துவக் கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்ட அணிக்கு 5 நபர்கள் கொண்ட கால்ப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் வல்வெட்டித்தறை நெடியகாடு விளையாட்டுக் கழகம் சென்சேவியர் விளையாட்டுக்; கழகம்; சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகம்விண்மீன் விளையாட்டுக் கழகம் என்பன வெற்றி பெற்று அடுத்தசுற்றுக்களுக்கு முன்னேறியுள்ளன.குறித்த போட்டிகள் நேற்றும் நேற்;று முன்தினமும் வல்வை நெடியகாடு விளையாட்டக் கழக மைதானத்தில் இடம்பெற்றன.
முதலில் இடம்பெற்ற ஆட்டத்தில் சக்கோட்டை சென் சேவியர் விளையாட்டுக் கழகமும் மயிலிட்டி கண்ணகி விளையாட்டுக் கழகமும் மோதின மிகவும் பரபரப்பாக இடம்பெற்ற இவ்வாட்டத்தில் பலத்த போராட்டத்தின் பின் 1:0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
தோடர்ந்து இடம்பெற்ற ஆட்டங்களில் வல்வை நெடியகாடு விளையாட்டுக்கழகம் அல்வாய் நண்பர்கள் விளையாட்டு;க் கழகத்தை 2:0 என்ற கோல்கள் அடிப்படையிலம் பலாலி விண்மீன் விளையாட்டுக் கழகம் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக் கழகத்தை 4:0 என்ற அடிப்படையிலு; வெற்றி கொண்டன.இறுதியாக இடம்பெற்ற ஆட்டத்தில் மணற்காடு சென்அன்ரனீஸ் விளையாட்டுக் கழகமும் வல்வை விளையாட்டுக் கழகமும் மோதின.ஆரம்பம் முதல் இறுதிவரை இரு அணியினரும் சமபலத்துடன் மோதிய இவ்விhட்டத்தில் ஆட்ட நேரம் முழுவதும் இரு அணியினராலும் கோல்களைப் பதிவு செய்து கொள்ள முடியவில்லை.இதனால் வெற்றியாளரை சமனிலை தவிர்ப்பு உதைமூலம் தெரிவு செய்யவேண்டிய நிலை ஏற்ப்பட்டது. இதில் 3:2 என்று சென்அன்ரனீஸ் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.