இதில் 21 வயதப்பிரிவில் ஆண்களில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவனான எஸ்.றொசான் மகாநாமவும் பெண்கள் பிரிவில்யாழ் இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.நர்மதாவும் 25 புள்ளிகளைப் பெற்று முதல் நிலையைப் பெற்றுள்ளனர்.
இத்தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ள மாணவர்களின் விபரம் வருமாறு,
ஆண்கள் பிரிவில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியை மாணவனான எஸ்.றொசான் மகாநாம 25 புள்ளிகளைப் பெற்று முதலாவது இடத்தையும் எஸ. சஜீவன் (தெல்லிப்பழை யூனியன் கல்லூரி) இரண்டாமிடதடதையும்,எஸ்.சாமூவேல் (யாழ் மத்தியகலலூரி) எஸ். கிருசிகன் (யூனியன் கல்லூரி) மற்றும் எஸ் கவிதன் (கொக்குவில் இந்துக் கல்லூரி)ஆகிய மூவரும் மூன்றாமிடத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
பெண்கள் பிரிவில் எஸ்.நர்மதா(யாழ் இந்து மகளிர் கல்லூரி)25 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும் எஸ்.பதுமிலா(யாழ் இந்து மகளிர் கல்லூரி) இரண்டாமிடத்தையும், எஸ்.கனுஜா (வல்வை மகளிர் கல்லூரி) எஸ்.லாவண்ஜா(சுண்டுக்குளி மகளிர் கல்லூரி)எஸ் மேரி ஆன்திரேசா (வல்வை மகளிர் கல்லூரி)மூவரும்மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டனர்.