நாடு முழுவதிலும் காணப்படும் 4,607 பரீட்சை நிலையங்களில் நாளை பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.வரலாற்றில் மிக அதிகளவான பரீட்சார்த்திகள் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்காக தோற்றுகின்றனர் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.இந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக 6,64,715 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். கடந்த ஆண்டை விடவும் 87இ128 பரீட்சார்த்திகள் அதிகளவில் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.534 பரீட்சை இணைப்பு நிலையங்கள் செயற்பட உள்ளதுடன் சுமார் 41,000 பேர் பரீட்சைக் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பரீட்சை ஆரம்பமாகும் உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையங்களுக்கு செல்லமாறும், வினாக்களை நன்றாக வாசித்து புரிந்து கொண்டு தெளிவாக விடையளிக்குமாறும் பரீட்சை ஆணையாளர் பரீட்சார்த்திகளிடம் கோரியுள்ளார்.பரீட்சை நேர அட்டவணை தொடர்பில் சரியாக பார்த்து அதற்கு ஏற்ற வகையில் பரீட்சைக்கான ஆயத்தங்களை செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார், என ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது