ஞானம் பதிப்பகத்தின் வெளியீடான வல்வை சிவகுரு வித்தியால பழைய மாணவனும் பேராதனைப் பல்கலைக்கழக வல்வைக்கமல் எழுதிய “வானத்தின் அமைதி குலைகின்றது” என்ற கவிதைத் தொகுப்பு நேற்று வெளியிடப்பட்டது.வுல்வை சிவகுரு வித்தியால மண்டபத்தில் எழுத்தளாரும் கல்வியியலாளருமான என்.அனந்தராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஞானம் பிரதம எழுத்தாளர் தி.ஞானசேகரன் கலந்து கொண்டார். நூலின் வெளியீட்டுரையை ஞா.பாலச்சந்திரனும் அறிமுக உரையை வித்தியாலய அதிபர் எஸ்.ஜெயானந்தகுமாரும் ஆய்வுரையை ஆசிரியரும் கவிஞருமான சு.குணேஸ்வரனும் நிகழ்த்தினர்.