வலயம்,மாவட்டம்,மாகாணம் மற்றும் தேசியம் ஆகிய மட்டங்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்த வீர வீரhங்கனைகள் வடமராட்சி கல்வி வலயத்தால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.
வலயக்கல்விப்பணிப்பாளர் சி.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வட மாகாண பிரதமசெயலாளர் ஏ. பத்திநாதன் வடமாகாண கல்விப்பணிப்பாளர் எஸ். உதயகுமார் வடமாகாண பிரதிகல்விப்பணிப்பாளர் கே. சத்தியபாலன் வடமாகாண சபை உறுப்பினர்களான வே. சிவயோகன் இசு.சுகிர்தன் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டிக் பௌரவித்தனர்.
இதில் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியிலிருந்து பளூதூக்கல் போட்டியில் சாதனை படைத்த ஏ.சிந்து,கே. யோகேஸ்வரி மற்றும் ஆர்.தசாந்தினி ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.இவர்களில் சிந்து மாகாண மட்டப்போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததுடன் கே. யோகேஸ்வரி மாகாண மட்டத்தில் 17 வயதுப் பிரிவு பளூதூக்கலில் வெற்றி பெற்று தேசிய மட்டப் போட்டிகளில் 17 வயதுப் பிரிவில் 53 கிலோப் பிரிவில் வெண்கலப்பதக்கத்தையும் ஆர்.தசாந்தினி 19 வயதுப் பிரிவுவில்44.52 கிலோப்பிரிவில் வெண்கலப்பதக்கத்தையும் பெற்றதை குறிப்பிடத்தக்கது.
Home சிதம்பரா கல்லூரி வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியிலிருந்து பளூதூக்கல் போட்டியில் சாதனை படைத்த வீரங்கனைகள் கௌரவிக்கப்பட்டனர்.