இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் நடத்தும் எவ்.ஏ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

0
194 views

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் நடத்தும் எவ்.ஏ கிண்ணத்துக்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக்கில் பதிவு செய்த அணிகளுக்கிடையிலான ஆட்டங்கள் நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் மற்றும் அல்வாய் நண்பர்கள் விளையாட்டுக்கழகம் ஆகிய மைதானங்களில் இடம்பெற்று வருகின்றன.
அதில் இன்று திங்கட்கிழமை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறும் முதலாவது ஆட்டத்தில்சக்கோட்டை சென்சேவியர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகமும் பிற்பகல் 4.30 மணிக்கு இடம் பெறும் இரண்டாவது ஆட்டத்தில் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து பொலிகை பாரதி விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here