ஆட்டம் முழுவதனையும் ஸ்ரீதமது கட்டுப்பாட்டில் வைத்தருந்த தெல்லிப்பழை மகாஜனாக் கல்லாரி 21:7 என்ற கோல்கணக்கில் கொற்றாவத்தை றேஞசர்ஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்தி கழுகுகளின் வெற்றிக்கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.வுல்டெ;டித்தறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் யாழ் மாவட்ட ரீதியாக நடத்திய வலைப்பந்தாட்டச்சுற்றுப் போட்டியின் இறுதியாட்டமும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று முன்தினம் குறித்த மைதானத்தில் மின்னொளியில் இடம்பெற்றன.
இவ்விறுதியட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகமும் தெலிலிப்பழை மகாஜனா கல்லூரி அணியும் மோதின. நான்கு பரியாட்டங்களைக் கொண்ட இச்சுற்றுப்போட்டியில் முதற்பாதியில் இரு அணியினரும் மாறி மாறி கோல்போட ஆட்டம் விறுவிறுப்பானது.முதல்பாதியில் 7:3 என்று முன்னிலை பெற்றதுமகாஜனாக் கல்லூரி அணி.தொடர்ந்த விளையாடிய றேஞசர்ஸ் அணியினர் உதிரணியின் பந்தப்பரிமாற்றங்களுக்கு ஈடுகொடுத்து விளையாட முடியாது திண்டாடினர். இதனை தமக்குச் சாமதகமாகப்பயன்படுத்திய மகாஜனா அணி அபாரமாக விளையாடி அடுத்துடத்து கோல்களைப் போட்ட அசத்த இறுதியில் 21:7 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கிக் கொண்டது.இப்பொட்டியில் மூன்றாமிடத்தை அல்வாய் விக்கிரமன் விளையாட்டுக் கழகம் பெற்றுக் கொண்டது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்களையும் பதக்கங்களையும் வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் ,கே.தர்மலிங்கம் ஆகியோர் வழங்கிக் கௌரவித்தனர்