பாரம்பரியமும் பெருமையும் மிக்க வல்வை சிதம்பரக்கல்லூரியின் கல்விவளர்ச்சி கருதியும்,கணித விஞ்ஞான துறைகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்து அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டும், கல்வி மற்றும் பௌதீகவள தேவைகளை பாடசாலையுடன் நேரடித்தொடர்புகளை ஏற்படுத்தி சிதம்பரக் கல்லூரியை கல்வித்தரத்தில் ஒரு உன்னத இடத்திற்கு இட்டுச்செல்லும் நோக்கில் உலகெங்கும் பரந்து வாழும் வல்வை மக்களின் கோரிக்கைக்கிணங்க புலம்பெயர் சிதம்பரக்கல்லூரி பழையமாணவர் சங்கம் பழைய மாணவர் மற்றும் நன்கொடையாளர்களால் இலண்டனில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட நிர்வாகசபை உறுப்பினர்கள் விபரம்:
காப்பாளர்: திரு. ளு . குருகுலலிங்கம் (அதிபர்)
தலைவர் : திரு. சு . பிரேம்நாத்
செயலாளர், அதிகாரபூர்வ பேச்சாளர் : திரு. ஆ . ராமானந்
பொருளாளர் : திரு. ஆ ரமேஷ்
செயற்குழு உறுப்பினர்கள்:
திரு. S. ராஜசங்கர் ( உப அதிபர்)
திரு. N. ரஞ்சித் (கொழும்பு)
திரு. A. ராஜமோகன் (இந்தியா)
திரு. A. மதிவதனன்
திரு. Y. சசிகுமார்
திரு. S. யோகேந்திரா (கனடா)
திரு. A. மதியழகன்
திரு. K . சுகுமாரன்
சிதம்பரகல்லூரி இணையத்தில் http://www.chithambara.sch.lk உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு 07.11.15 அன்று இலண்டன் நேரப்படி 17:30 மணியளவில் ஆரம்பிக்கபட்ட இந்நிகழ்வில் ஏக மனதாக ஏற்றுகொள்ளபட்ட யாப்பு (அமைப்பு விதிகள்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.