வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக் கழகம் நடத்தும் வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்டமும் பரிசளிப்புவிழாவும் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு மின்னொளியில் குறித்த மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
கழகத்தலைவர் எஸ். சதீஸ் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் எ;.கே. சிவாஜிலிங்கமும் சிறப்புவிருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர்களான க.தர்மலிங்கம் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
யாழ் மாவட்ட ரீதியாக நடைபெறும் இப்போடடியில் பங்கு பற்ற விரும்பும் கழகங்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு முன்னர் தமது பெயர் விபரங்கிளைப் பதிவு செய்துகொள்ளுமாறு போட்டி ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.