இரட்டை பிரஜாவுரிமைக்காக 14 ஆயிரம் விண்ணப்பங்கள்

0
729 views

இரட்டை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்துள்ள 11 ஆயிரத்து 525 விண்ணப்பங்கள் தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ளப்படுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் வரை 14 ஆயிரத்து 525 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு 50 ஆயிரம் ரூபாவைக் கட்டணமாக செலுத்த வேண்டும் என உள்விவகார அமைச்சு கடந்த ஜனவரி மாதத்திற்கு முன்னதாக தெரிவித்திருந்தது. எனினும் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான கட்டணம் 3 இலட்சமாக  அதிகரிக்கப்படுவதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கம் இந்த திட்டத்தை மீள ஆரம்பித்த தினத்திலிருந்து இதுவரை மூவாயிரம் பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதோடுஇ மேலும் 500 பேருக்கு வெகுவிரைவில் இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் ஊடாக கடந்த 2011 ஆம் ஆண்டு வரை 42 ஆயிரத்து 979 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதோடுஇ கடந்த 2011 ஆண்டு அப்போதைய அரசாங்கத்தால் இந்தத் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்த காலப் பகுதியில் மாத்திரம் இரண்டாயிரம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here