மாகாண மட்ட தேசிய மட்ட பளூதூக்கல் போட்டியில் சாதனை படைத்த வல்வை சிதம்பராக் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் வடமராட்சி கல்வி வலயத்தால் நடத்தப்பட்டுள்ள வர்ண இரவுகள் நிகழ்வில் வைத்து கௌரவிக்கப்படவுள்ளனர்.
வடமராட்சி வலயப் பாடசாலைகளில் இருந்து மாவட்டமட்ட மாகாணமட்டம்மற்றும் தேசிய மட்டம் ஆகிய மட்டங்களில் மெய்வன்மைப்போட்டிகள் மற்றும் பெருவிளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவ மாணவிகளைப் பாராட்டிக் கௌளவிக்கும் வர்ண இரவுகள் நிகழ்வு எதிர்வரும் 2ஆம் திகதி நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இதில் 23 பாடசாலை அணிகளும் 50 மேற்ப்பட்ட தடகளப்போட்டியில் சாதனை நிலைநாட்டிய தனிநபர்களும் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.
அந்த வகையில் வல்வை சிதம்பராக் கல்லூரியில் இருந்து பளுதூக்கல் போட்டியில் மாகாண மட்டத்தில் சாதனை படைத்த ஏ.சிந்துவும் மாகாண மற்றும் தேசிய மட்ட பளுதூக்கல்ப் போட்டியில் வெற்றிபெற்று வலயத்திற்குப் பெருமை சேர்த்த கே.யோகேஸ்வரிமற்றும் ஆர்.தசாந்தினி ஆகியோருமே இவ்வாறு கௌரவிக்கப்படவுள்ளனர.