அடை மழை காரணமாக பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மீனவக் குடும்பங்கள்

0
212 views

தற்போது பெய்து வரும் அடை மழை காரணமாக வல்வெட்டித்துறை இ பொலிகண்டி உட்பட யாழ் மாவட்டத்தில் 23 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
கடலில் காணப்படும் சாதாரண நிலைமை காரணமாக மீனவர்கள் தொழிலுக்குச் செல்வது குறைந்துள்ளது.இதனால் கடல் உணவுகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொலிகண்டி சக்கோட்டைஇவல்வெட்டித்துறையின் சில பகுதிகள் உட்பட கரையோரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சொல்லெணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிரதேச செயலகங்கள் மூலம் சமைத்த உணவு வகைகள்மற்றும் உலருணவு வகைகள் என்பன வழங்கப்படுகின்றன.
அதேவேளை மழை காரணமாக மீன்பிடிப்பதற்கு கடலில் போடப்பட்டிருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான வலைகள் கடற்கொந்தளிப்பு காரணமாக சேத்த்திற்கு உள்ளாகியுள்ளது.
இதனால் நாளாந்தம் கடல் தொழில் செய்து வாழும் குடும்பங்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட மீனவர்களின் விபரங்களைத் திரட்டும் நடவடிக்கைகளில் யாழ்மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சம்மேளனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here