முருகனின் ஆறுபடைவீடுகளிலும் கந்தசஸ்ட்டி பெருவிழாவையும் சூரன் போரையும் பல லட்சம் பக்கதர்களுடன் கொண்டாப்படுவது வழமை. 7வது படை வீடாக தவத்திரு கிருபானந்தடிகளால் பிரகடனம் செய்யப்பட்ட இங்கிலாந்து ஆர்ச்வே கோயிலில் கந்தசஸ்ட்டி பெருவிழாவை இன்று முதல் நாள் பூசையாக அனுஸ்டித்து வருகின்றார்கள். எமது வல்வெட்டித்துறை முன்னர் ஒன்றரை மைல் நீளம் கொண்ட கிரமசபையாக மிளிர்ந்தது. முருகனின் அருளாசி பெற்ற வல்வை நகர் கிழக்கு எல்லையாக கந்தவனக்கடவை ஆறுமகசாமியும் மேற்க்கு எல்லையாக செல்வச்சந்நதியனும் அருள்பாலிக்கப்படுகின்றது.
திருச்செந்தூர் கோயில் 1087 ஆண்டு அளவில் ஈழத்து முதலாளிமார்களால் நிறுவப்பட்டதாக கோயிலின் கல்வெட்டில் பதியப்பட்டுள்து. ஆனால் திருச்செந்தூர் கோயிலின் கிழக்காக கடற்கரை ஓரத்தில் ஜயா கோயிலிலும் முருகன் ஆள் உயர வேலாக வேலவனகாக காட்சி தருகின்றார். இங்கு மூலவருக்கு பின்புறம் பெரிய நிலக்கண்ணாடி சாத்தப்பட்டுள்ளது. அக் கண்ணாடியில் திருச்செந்தூர் கோயிலின் முழுக்காட்சியும் தெரிகின்றது. இக் கோயிலின் மூலவரை வணங்கும் போது திருச்செந்தூரானின் முழு கோபுரதரிசனம் செய்யும் பாக்கியம் பெறுகின்றோம். ஜயா கோயிலின் வரலாறு 1008 ம் ஆண்டு என்று பதியப்பட்டுள்ளது.
இக்கோயிலில் கந்தசஸ்ட்டி பெருவிழா அன்று காலைப் பூசையின் பின்னர் உப்புக்கஞ்சி பிரசாதம் பருகும் பாக்கியம் பெற்றேன். நண்;பகல் சுவாமி ஊர்வலத்தில் கதிரை வாகனமாக சுவாமியை சுமந்தவர்கள் எல்லேலருமே தலைப்பாகை அணிந்து இருந்தார்கள். வல்வை மண்ணின் பராம்பரியம் போல் சடங்குகள் பூசைகள் நடைபெற்றது.எமது மூதாதையர்கள் கடலோடிகளாக வாழ்ந்த காலத்தில் அம்மண்ணில் வாழ்ந்துதான் ஜயா கோயிலையும் பின்னர்தான் திருச்செந்தூர் கோயிலையும் ஸ்தாபித்து இருப்பார்கள்.
திருச்செந்தூர் விழாவில் பல வல்வையர்களை சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். அவர்களில் நெடியகாடு சண்டியண்ணா அவர்களை முருகனின் வள்ளி தெய்வானை போல் இரு துணைவியர்களுடனும் மாறி மாறி வந்து மேற்கு வீதியில் அமர்ந்து கவசப்பாடல்கள் படித்துக்கொண்டு இருப்பார். எம் ஊரவர்கள் அக் கடலேரம் செய்த பண்டமாற்று வியாபாரங்கள் பற்றியும் திருச்செந்தூர் கோயில் விழாவுக்கு வருடவருடம் மின்அலங்காரங்கள் செய்ததாகவும் சொன்னார். திருச்செந்தூர் சூரன் பேரில் 13லட்ச்சம் மக்கள் கலந்து கொண்ட அற்புதக்காட்சியும் தரிசிக்க முடிந்தது.
இனிமேல் திருச்செந்தூர் செல்லும் அடியார்கள் ஜயா கோயிலையும் தரிசித்து எம் முதாதையர் பணிகளை பார்வையிட்டு வாருங்கள்.இக் கந்தசஸ்ட்டி காலத்தில் உங்கள் அனைவருக்கும் புலம்பெயர் வல்வையர்களின் ஒற்றுமையின் பலம் நிலைத்து நிற்க ஆனந்தமுருகன் பாதம் பணிகிறேன்.
வாழ்வோம் ஒற்றுமையுடன்.
வல்வை மாமாச்சி.
12.11.2015