சிதம்பராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தின நிகழ்வும் நேற்று இடம்பெற்றன
வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் தின நிகழ்வும் நேற்றும் புதன்கிழமை கல்லூரி கலையரங்கில் இடம்பெற்றன.கல்லூரி அதிபர் எஸ்.குருகுல்லிங்கம் தலைமையில் இடம்பெற்றஇந்நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமாரும் சிறப்பு விருந்தினராக வடமராட்சி கல்வி வலய கணக்காளர் திருமதி எம். மோகனச்சந்திரனும் கலந்து கொண்டனர்்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தலைவர் எஸ்.ஶ்ரீபதி நினைவுரையை ஆற்றினார்.
இதில் தேசியமட்ட பழுதூக்கல் போட்டியில் சாதனை படைத்த மாணவிகள் உட்பட பலமைப்பரீட்சையில் சித்தியடைந்தோரும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.மாணவர்களின் கவிதை நாடகங்கள் உட்பட பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.