தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் உன்ற கோரிக்கையை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்குப் பகுதியெங்கும் கடையடைப்பு இடம்பெறவுள்ளது.
இதற்கான அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த்தேசிய முன்னணி என்பன விடுத்துள்ளன.இந்த கடையடைப்புக்கு இலங்கை ஆசிரியர் சங்கம்,வடமாகாண ஆசிரியர் ஆலோசகர் சங்கம் உட்பட் பல்வேறு அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.இதனால் முக்கிய சந்தைகள் இயங்கமாட்டாது உன இன்று அறிவித்தல் வீக்கப்பட்டுள்ளது.இதேவேளை நேற்று 31 அரசியற் கைதிகள் கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் நேற்று கொழும்பு மேல நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.