வல்வெட்டித்துறையில் இன்று 12மணி நேரமாக தொடர் மழை

0
696 views

 

வல்வைப் பகுதி உட்பட வடமராட்சியின் பரவலாக கனத்த மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்வு நிலை வெகுவாகப்பாதித்துள்ளது.இன்று அதிகாலை முதல்பெய்து வரும் மழைகாரணமாக மீனவர்கள் தொழிலுக்கு செல்வது குறைவாக்காணப்பட்டது.

தீபாவளித் திருநாள் நெருங்கிவரும் நிலையில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழைகாரணமாக கடைகளுக்கு பொருட்களைக் கொள்வனவு செய்ய வருவோர் குறைவாகக் காணப்படுவதனால் கடை உரிமையாளர்கள் வேலையின்றி  ஈ ஓட்டிக்கொண்டிருப்பதனை அவதானிக்க் கூடியதாக உள்ளது. வல்வெட்டித்துறை அண்டிய தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வழிந்தோடுவதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இன்றையதினம் உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தொழில் நுட்பப் பரீட்சை இடம்பெற்றதனால் மாணவர்கள் மழைக்கு மத்தியிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் . வீதிகள் பலவும் வெள்ளக் காடாகக் காட்சியளிப்பதால் போக்கு வரத்தில் ஈடுபடுவதில் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கயதோடு போக்குவரத்தும் குறைவாக வீதிகள் வெறிச்சோடிக்காணப்பட்டன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here