கம்பர்மலைப் பகுதியில் வைத்து குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி எஸ்.சிவனேசன், இன்று வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி ஒருவர் மூலம் சரண்டைந்தார்.கடந்த மாதம் நீதிமன்றத்திற்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த குடும்பப் பெண்ணை இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்று சட்டத்தரணியின் வீட்டில் வைத்திருந்துள்றது.இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்ணின் கணவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சூழ்நிலையில் இவர்களுக்கு உதவி செய்தார் என்ற சந்தேகத்தில் சட்டத்தரணி சிவனேசனை கைது செய்ய வல்வெட்டித்துறைப் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர