பருத்தித்துறைப் பரிவுக்கான புதிய பொலிஸ் நிலையம் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

0
321 views

காங்கேசன்துறைபொலிஸ் பிரிவின் பருத்தித்துறைப் பரிவுக்கான புதிய பொலிஸ் நிலையம் இன்று காலை 10 மணிக்கு சட்டம் ஒழங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாறப்பனவால் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இத்திறப்பு விழா நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் சிறுவர் மகளிர் விவகார அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் ஈ.சரவணபவன் மற்றும் த.சித்தார்த்தன் ஈ.பிடிபி நாடாளுமன்ற உறுப்பனர் கே.ன. டக்ளஸ் தேவானந்தா யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.செந்தில்நந்தனன் வடமாகாண ஆளுநரின் செயலாளர் எஸ் இளங்கோவன் யாழ் மாவட்ட மேல்நீதிபதி எம். இளஞசெழியன் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மா.கணேசராசா ஆகியோர் பொலிஸ் நிலைய முன்றலில் இருந்து கண்டி நடனத்துடன் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் திலக் மாறப்பனவும் பொலிஸ் மா அதிபரும் ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சமயப்பெரியார்களின் ஆசிரவழங்களை அடுத்து அமைச்சிரினால் பொலிஸ் நிலையத்திற்கான நினைவுக்கல் திரைநீக்கம் செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தின் கட்டடத்தொகுதியை நாடாவெட்டித்திறந்து வைத்தார்.இந்நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதேச செயலர்கள் வடமாகாண சபை உறுப்பனர்கள் படை உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here