குரும்பைகட்டி உதயசூரியன் விளையாட்டுக்கழகம் கிறிக்கற் சுற்றுப்போட்டியியில் வல்வை நெடியகாடு விளையாட்டுக்கழகத்தை 55ஓட்டங்களால் தோற்கடித்தது வல்வை விளையாட்டுக்கழகம்
உதயசூரியன் விளையாட்டுக் கழகம் வடமராட்சிக்குட்பட்டகழகங்களுக்கிடையில் நடத்தும் கிறிக்கற் சுற்றுப்போட்டி கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதில் நேற்று இடம்பெற்ற ஆட்டம் ஒன்றில் வல்வை விளையாட்டுக்கழகமும் வல்வை நெடியகாடு விளையாட்டுக் கழகமும் மோதின.இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய வல்வை அஅணி நிர்ணயிக்கப்பட்ட 10ஓவர்களில்116 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணியின் சார்பாக ஜெகன் 48 ஓட்டங்களையும்றஞ்சித் 25ஓட்டங்களையும் பிரணவன் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
தொடர்ந்து 117 ஓட்டங்களை வெற்றி இலக்காக்க் கோண்டு துடுப்பெடுத்தாட களமிறங்கிய நெடிய காடு விளையாட்டுக் கழகம் 7.2 ஓவர்களில்அனைத்து விக்கற்றுக்களையும் இழந்து 61 ஓட்டங்களை மட்டும் பெற்று 55ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.பந்து வீச்சில் றஞ்சித 3விக்கட்டுக்களையும் பிரணவன் ஜெகன் ஆகியோர் தலா 2 விக்கட்டையும் வீழ்த்தினர்