வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் அமைந்துள்ள வல்வை விக்னேஸ்வரா முன்பள்ளியில் இன்று ஆசிரியர் தின நிகழ்வுகள் இடம் பெற்றன. காலை 10.30 மணிக்கு கப்பலுடையவர் தேவதான இறை வழிபாட்டுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
முன்பள்ளி மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டு , நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வுகள் வல்வை விக்னேஸ்வரா சனசமுக சேவா நிலையம், விக்னேஸ்வரா முன்பள்ளி ஆகியவற்றின் தலைவர் சி.தவராசா தலைமையில் நடைபெற்றன. விழாவினை முன்பள்ளி நிர்வாகமும் மாணவர்களின் பெற்றோர்களும் இணைந்து நடாத்தினர்.
தொடர்ந்து ஆசிரியர்கள் கௌரவிப்பும், ஆசிரியர்களுக்கு விசேட பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது
பிரியாவிடை நிகழ்வு
முன்பள்ளியில் கடந்த பத்து வருடங்களாக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் திருமதி nஐகதீஸ் யாழினிக்கு நிர்வாகத்தின் சார்பில் சேவையை பாராட்டும் முகமாக நினைவுமடல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தொகுப்பு படங்களை கீழே அவதானிக்கலாம்